விளையாட்டு

ஐ.பி.எல் – 8 விக்கட்டுகளால் பெங்களூர் அணி வெற்றி

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான 28-வது லீக் போட்டி நேற்றிரவு மொகாலியில் நடைபெற்றது.

இதில் நாணயச் சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை எடுத்தது.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெய்ல் 99 (64) ரன்கள் எடுத்தார். லோகேஷ் ராகுல் மற்றும் மன்தீப் சிங் 18 ரன்கள் எடுத்தனர்.

பெங்களூர் அணியில் சாஹல் 2 விக்கெட், மொயின் அலி மற்றும் முகமது சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 19.2 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து (174 ரன்கள்) இலக்கை எட்டியது. இதனையடுத்து பெங்களூர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப்பெற்றது.

பெங்களூர் அணியில் சிறப்பாக விளையாடிய விராட்கோலி 67 (53) ரன்கள், டிவில்லியர்ஸ் 59 (38) ரன்கள் எடுத்தனர்.

பஞ்சாப் அணியில் ஆர்.அஸ்வின் மற்றும் முகமது ஷமி 1 விக்கெட் வீழ்த்தினர்.