விளையாட்டு

ஐ.பி.எல் – ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி

மும்பையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல்லின் 27-வது லீக் போட்டி நடைபெற்றது.

இதில் நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை எடுத்தது.

மும்பை அணியில் அதிகபட்சமாக குவின்டன்  81 (52) ரன்கள், ரோகித் சர்மா 47 (32) ரன்கள், ஹர்திக் பாண்டியா 28 (11) ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட், தவால் குல்கர்னி மற்றும் ஜெய்தேவ் உனட்கட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.3 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து (188 ரன்கள்) இலக்கை எட்டியது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணியில், அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 89 (43) ரன்கள் விளாசினார். ரஹானே 37 (21) ரன்கள், சஞ்சு சாம்சன் 31 (26) ரன்கள் எடுத்தனர்.

மும்பை அணியில் கிருணல் பாண்டியா 3 விக்கெட், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட், ராகுல் சாஹார் 1 விக்கெட் வீழ்த்தினர்.