விளையாட்டு

ஐ.பி.எல் போட்டியை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த தீர்மானம்

13 ஆவது ஐ.பி.எல் போட்டியை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள ஐ.பி.எல் அதிகாரிகள் அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் போட்டிக்கான திகதி அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

ஐ.பி.எல் நிர்வாகக்குழு அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் காணொளி மூலம் கூடி திகதி குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த கலந்துரையாடலின் போதே ஐ.பி.எல் போட்டி அட்டவணை முடிவு செய்யப்படும் எனவும் ஐ.பி.எல் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவிலும், 2014 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்திலும் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.