விளையாட்டு

ஐ.பி.எல். தொடரின் ப்ளே ஓப் (playoff) சுற்று நாளை..

ஐ.பி.எல். தொடரின் ப்ளே ஓப் (playoff) சுற்று நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது.

இந்த சுற்றில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ப்ளே ஓப் சுற்றில் 8 ஆம் திகதி நடைபெறும் இரண்டாவது போட்டியில் டில்லி கேபிடல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கின்றது.

ஐ.பி.எல்லின் இந்த தொடரில், 56 போட்டிகளுக்கு பிறகு 14 போட்டிகளில் 9 வெற்றிகளை பெற்று 18 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி வரிசையில் முதல் இடத்தில் உள்ளது.

அதே புள்ளிகள் மற்றும் வெற்றி எண்ணிக்கையில் இருக்கும் சென்னை அணி,ஓட்ட விகித அடிப்படையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஏழு வருடங்களுக்கு பிறகு ப்ளே ஓப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள டில்லி கேபிடல்ஸ் அணி 18 புள்ளிகளை கொண்டு மூன்றாம் இடத்தில் உள்ளது. சென்னை மற்றும் மும்பை அணியைக் காட்டிலும் குறைவான ரன் விகிதம் இருப்பதால் மூன்றாவது இடத்தில் உள்ளது அந்த அணி.

14 போட்டிகளில் ஆறு வெற்றிகளை பெற்று 12 புள்ளிகளுடன் ஐதராபாத் அணி நான்காவது இடத்தில் உள்ளது.