விளையாட்டு

ஐ.பி.எல் – டெல்லி அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்று நடைபெற்ற 26-வது லீக் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்தது.

கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சுப்மான் கில் 65 (39) ரன்களும், அதிரடியாக விளையாடிய ஆந்த்ரே ரஸ்செல் 45 (21) ரன்களும், உத்தப்பா 28 (30) ரன்களும் எடுத்தனர்.

டெல்லி அணியில் கீமோ பால், ரபடா, மோரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.5 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து (180 ரன்கள்) இலக்கை எட்டியது.

இதன்மூலம் டெல்லி அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது .

டெல்லி அணியில் சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான் 97 (63) ரன்கள், ரிஷாப் பான்ட் 46 (31) ரன்கள் எடுத்தனர்.

கொல்கத்தா அணியில் ரஸ்செல், நிதீஷ் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.