விளையாட்டு

ஐ.பி.எல் – சென்னை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி

 

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த 29-வது லீக் போட்டியில்நாணயச் சுழற்சியில் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்தது . கொல்கத்தா அணியில் அதிரடியாக விளையாடிய கிறிஸ் லின் 82 (51) ரன்களை எடுத்தார் .

சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசிய இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தாகூர் 2 விக்கெட் மற்றும் சான்ட்னர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து (162 ரன்கள்) இலக்கை எட்டியது. இதன்மூலம் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.