விளையாட்டு

ஐ.பி.எல் – சென்னை அணி 4 விக்கட்டுகளால் அபார வெற்றி

ஜெய்ப்பூரில் – சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 25-வது லீக் ஐ பி எல் போட்டியில் சென்னை அணி 4 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது..

நாணயச் சுழற்சியில் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்துள்ளது.

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 28 ரன்களும், ஜோஸ் பட்லர் 23 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட், தீபக் சாஹர் 2 விக்கெட், சாட்னர் 1 விக்கெட், தாகூர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி இறங்கியபோதும் அடுத்தடுத்து விக்கட்டுக்களை இழந்தது. டோனியும் அம்பத்தி ராயுடுவும் வலுவாக விளையாடியபோதும் 57 ரன்கள் எடுத்த நிலையில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் 8 பந்துகளுக்கு 24 ரன்கள் எடுக்க இருந்த வேளையில் பரபரப்பாக விளையாடிய டோனி 58 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஸ்டோக்சின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் . என்றாலும் போராடி இறுதியில் ஒரு பந்துக்கு 4 ரன்கள் தேவை என்ற நிலையில் சண்ட்னர் சிக்ஸர் அடித்து சென்னைக்கு வெற்றி தேடித் தந்தார்.