விளையாட்டு

ஐ.பி.எல் – சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான 18வது லீக் போட்டி நடைபெற்றது.

இதில், நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதனையடுத்து முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக டு ப்ளசிஸ் 54 (38) ரன்கள், டோனி 37 (23) ரன்கள், ஷேன் வாட்சன் 26 (24) ரன்கள், அம்பத்தி ராயுடு 21 (15) ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஆர்.அஸ்வின் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இதனையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 55 (47) ரன்கள், சர்ப்ராஸ் கான் 67 (59) ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் ஸ்காட் குகலின் மற்றும் ஹர்பஜன்சிங் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.