விளையாட்டு

ஐ.பி.எல் – ஐதராபாத் அணி வெற்றி

ஐ.பி.எல் கிரிக்கெட் 11-வது லீக் போட்டியில் ,ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 100 ரன்கள், பேர்ஸ்டோவ் 114 ரன்கள் எடுத்தனர்.

இந்நிலையில், 232 ரன்கள் என்றகள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள், பார்தீவ் பட்டேல் 9 ரன், ஹெட்மையர் 9 ரன்கள் , விராட் கோலி 3 ரன்கள் , டி வில்லியர்ஸ் 1 ரன், மொயீன் அலி 2 ரன்கள் , ஷிவம் டுபே 5 ரன்கள் , என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்களை இழந்து வெளியேறினர்.

இதனையடுத்து பெங்களூரு அணி 19.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஐதராபாத் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக கிராண்ட்ஹோம் 37 ரன்கள் எடுத்தார். பிரயாஸ் பர்மன் 19 ரன்கள், உமேஷ் யாதவ் 14 ரன்கள் எடுத்தனர்.

ஐதராபாத் அணியில் சிறப்பாக பந்துவீசிய முகமது நபி 4 விக்கெட்கள் மற்றும் சந்தீப் சர்மா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.