Breaking News

ஐ நா பிரேரணையிலிருந்து விலகும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி !

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை இணை அனுசரணை வழங்கிய 30/1 மற்றும் 40/1 ஆகிய இரண்டு பிரேரணைகளிலிருந்து விலகிக் கொள்ளும் அரசின் யோசனைக்கு நேற்றிரவு கூடிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த முன்மொழிவை சமர்ப்பித்தார். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதனையடுத்து மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைகளிற்கு இணை அனுசரணை வழங்குவதிலிருந்து விலகிக் கொள்ளும் திட்டம் குறித்து இன்று (20) நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.

விரைவில் ஜெனீவா செல்லவுள்ள அமைச்சர் தினேஷ் குணவர்தன , அரசின் இந்த நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிவிப்பார்.