இலங்கை

ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் கொழும்பில் மாரப்பனவுடன் சந்திப்பு2015 ஆம் ஆண்டில் இலங்கையால் ஐ.நா.வின் சிறப்பு நடைமுறைகள் பணிப்பாணையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட நிலையான அழைப்பிற்கு பதிலளிக்கும் விதமாக சிறப்பு அறிக்கையாளர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் சிறப்பு நடைமுறைகள் கட்டளை வைத்திருப்பவர் ஒருவர் நாட்டிற்கு மேற்கொண்ட 10 வது விஜயம் இதுவாகும். இந்த விஜயத்தை இலங்கை அரசும் சிறப்பு அறிக்கையாளரும் 2018 இல் திட்டமிட ஒப்புக்கொண்டிருந்தனர்.

ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் திறந்த, வெளிப்படையான மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபடுவதற்கான அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப, சிறப்பு நடைமுறைகள் பணிப்பாணையாளர்கள் பலரின் வருகைகளுக்கு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மாரப்பன இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது தெரிவித்தார்.

சிறப்பு அறிக்கையாளர்களுடன் ஈடுபடுவதை அரசாங்கம் எப்போதும் பாராட்டுவதாகவும், அவர்களின் கருத்துக்களை சாதகமாக கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சிறப்பு அறிக்கையாளரரின் விஜயத்தின் போது இலங்கை அரசு தனது முழுமையான ஒத்துழைப்பை அவருக்கு வழங்கும் என சிறப்பு அறிக்கையாளருக்கு அவர் உறுதியளித்தார்.

சிறப்பு அறிக்கையாளர் இந்த அழைப்பிற்காக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த அதே வேளை, குறிப்பாக ஈஸ்டர் ஞாயிறு சம்பவங்களுக்குப் பின்னர் நாடு எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் உணர்ச்சி ரீதியான விடயங்கள் ஆகியவற்றை ஒப்புக் கொண்டார். 21 ஏப்ரல் 2019 சம்பவங்களைத் தொடர்ந்து, இடம்பெயர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளின் காவல் மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க அரசாங்கம் எடுத்துள்ள முறையை அவர் குறிப்பாகப் பாராட்டினார்.

வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆர்யசிங்க தலைமையில் இடம்பெற்ற சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளின் கூட்டத்திலும் சிறப்பு அறிக்கையாளர் கலந்து கொண்டார். பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், புத்த சாசன மற்றும் வயம்ப அபிவிருத்தி அமைச்சு, சுற்றுலா மேம்பாட்டு அமைச்சு, வனவிலங்கு மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சு, தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள் அமைச்சு, பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் அமைச்சு, வீடமைப்பு, கட்டுமானங்கள் மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு, தேசிய கல்வி ஆணைக்குழு, நல்லிணக்க வழிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியன உள்ளடங்கலான பல அரச நிறுவனங்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டன.

அரச பங்குதாரர்களின் கூட்டத்தின் போது, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை எதிர்கொள்ளும் நிலைமையை சீராக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் நேர்மறையான அம்சங்களுடன், அனைத்து மக்களின் காவலையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என வெளிவிவகார செயலாளர் ஆர்யசிங்க குறிப்பிட்டார்.

மிதவாதப்படுத்தல், தீவிரவாதம் மற்றும் பிற நாடுகளும் இதேபோன்ற இடர்களை நிவர்த்தி செய்வதில் பயன்படுத்தும் சிறந்த நடைமுறைகள் குறித்து சிறப்பு அறிக்கையாளரின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள அரசு ஆர்வமாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிறப்பு அறிக்கையாளர் தனது வருகையின் போது வடக்கு, கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பல பகுதிகளுக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதத் தலைவர்கள், சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியோரையும் அவர் மேலும் சந்திப்பார்.

விஜயத்தின் முடிவில், அரசாங்க பங்குதாரர்களுக்கான ஒரு விளக்கவுரை 26 ஒகஸ்ட் 2019 அன்று நடைபெறுவதுடன், அதனைத் தொடர்ந்து சிறப்பு அறிக்கையாளரின் ஆரம்ப கண்டறிதல்களை ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக, பத்திரிகையாளர் சந்திப்பொன்று அதே நாளில் இடம்பெறும். சிறப்பு அறிக்கையாளர் நாட்டிற்கான விஜயம் குறித்த தனது அறிக்கையை 2020 மார்ச் மாதம் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பார்.