Breaking News

ஐ தே மு பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் சஜித் சந்திப்பு !


பாராளுமன்றம் நாளை கூடவுள்ள நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை சஜித் பிரேமதாச சந்தித்து பேசினார்.

பாராளுமன்றக் குழு அறையில் நடந்த இந்த சந்திப்பின்போது , எதிர்கால எதிர்க்கட்சி அரசியலை பலமாக முன்னெடுப்பது குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் கட்சித் தலைவர் ரணிலும் , சஜித்தும் ஒன்றாக கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பது இது முதற்தடவையாகும்.