இலங்கை

ஐ. தே . க பாராளுமன்றக் குழு கூடியது – வேட்பாளர் பற்றிய பேச்சே இல்லையாம் !

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழு பிரதமர் ரணில் தலைமையில் இன்று மாலை கூடியது.

இவ்வாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள விடயங்கள் மட்டும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டன.

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்து இன்றைய கூட்டத்தில் பேசப்படுமெனவும் அமைச்சர் சஜித்தின் ஆதரவாளர்கள் இது பற்றி இன்று ஒரு முடிவுக்கு வரவுள்ளதாகவும் முன்னதாக செய்திகள் வந்திருந்தன.

ஆனால் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் பற்றி இன்று யாரும் மூச்சுக் காட்டவில்லை.

சஜித்தின் ஆதரவாளர்களாக செயற்பட்ட எம் பிக்கள் பலரை பிரதமர் ரணில் மடக்கி தன் வசப்படுத்தியிருப்பதே இதற்கான காரணமென ஐக்கிய தேசியக் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் ரணில் போட்டியிட வேண்டுமென்ற யோசனையொன்றை கட்சியின் நிறைவேற்றுக்குழுவில் முன்வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடப்பதாக மேலும் அறியமுடிந்தது.