Breaking News

ஐ தே க எம் பி ஹேஷா மீது பிடியாணை !

நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் வழக்கொன்றிற்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகாத, ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவுக்கு எம்பிலிபிட்டி நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு நீதவான் கே.பீ.ஆர்.எல்.விதானகமகே இன்று (30) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொழும்பைச் சேர்ந்த வர்த்தகரான ஜே.ஏ.அநுர மஹேந்திரவிற்கு எம்பிலிபிட்டி பகுதியிலுள்ள இரண்டு கோடி ரூபா பெறுமதியான சொத்தை, பாராளுமன்ற உறுப்பினர் மோசடியான முறையில் பயன்படுத்தியதாக எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்னமாகாத நிலையிலேயே நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.