விளையாட்டு

ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் முதல் போட்டி- நாணயச்சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது

ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் முதல் போட்டி- நாணயச்சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 12வது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்கி ஜூலை 14ந்தேதி வரை 11 இடங்களில் நடைபெறுகிறது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து நடத்துவது இது 5வது முறையாகும்.

இன்று தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில்போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.