விளையாட்டு

ஐ.சி.சியின் பலம்மிக்க பொறுப்பில் பாகிஸ்தான் கிரிக்கட் சபை தலைவர்

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (பிசிபி) தலைவரான எசான் மணி சர்வதேச கிரிக்கட் பேரவையின் மிக சக்திவாய்ந்த குழுக்களில் ஒன்றான நிதி மற்றும் வணிக விவகாரங்களுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது இந்த நியமனம் இந்திய, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைகளின் ஒரு தசாப்தத்திற்கும் மேலான ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.
இந்த பிரிவானது ஐ.சி.சியின் நிகழ்வுகளுக்கான நிதி ஒதுக்கங்களை மேற்கொள்வதுடன், உறுப்பு நாடுகளுக்கு நிதியை விநியோகிக்கிறது.
இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக இந்திரா நூயி (சுயாதீன இயக்குனர்), அமிதாப் சவுத்ரி (பிசிசிஐ பதில்; செயலாளர்), கிறிஸ் நென்சானி (சிஎஸ்ஏ தலைவர்), இம்ரான் கவாஜா (ஐசிசி துணைத் தலைவர்), ஏர்ல் எடிங்ஸ் (சிஏ தலைவர்) மற்றும் கொலின் கிரேவ்ஸ் (ஈசிபி தலைவர்) ) ஆகியோர் உள்ளனர்.
இதற்கு முன்னர் எசான் மணி 1996 மற்றும் 2002 க்கு இடையில் இந்த பதவியை வகித்திருந்தார்.