Breaking News

ஐ எஸ் தலைவர் அமெரிக்காவால் கொல்லப்பட்டாரா? – திடீர் தகவல் !

ஐ எஸ் ஐ எஸ் இயக்கத் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி சிரியாவில் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

நேற்று அமெரிக்கப் படைகளால் மறைவிடமொன்றில் பக்தாதி கொல்லப்பட்டதாகவும் , மரபணு பரிசோதனைகள் நடத்தப்பட்ட பின்னர் அது தொடர்பில் அறிவிப்பு வெளியாகுமென்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் நடந்த சமயம் பக்தாதி தற்கொலை தாக்குதல் நடத்தும் சீருடை ஒன்றை அணிந்திருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விசேட அறிவிப்பொன்றையும் வெளியிடவுள்ளார் என சொல்லப்பட்டது.

இதேவேளை முக்கிய நிகழ்வு ஒன்று நடந்துள்ளதாக ட்ரம்ப் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.