Breaking News

ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் 63 பேர் தொடர்ந்து விளக்கமறியலில்..!

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ் . பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 63 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 24 திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு இன்று வியாழக்கிழமை (10) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஸ்வான் உத்தரவிட்டார்.

ஏப்ரல் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட 64 பேர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு வியக்கமறியலில் வைக்கப்பட்ட 63 பேரும் இன்று வியாழக்கிழமை (10); நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவர்களை எதிர்வரும் 24 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.