உலகம்

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரித்தானிய பிரதிநிதிகள் வெளியேற்றம்

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரித்தானியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் 73 பிரதிநிதிகளும் தமது பொறுப்புக்களில் இருந்து நிரந்தரமாக வெளியேறியுள்ளனர்.

நாளைய தினம் பிரெக்சிற் இடம்பெறவுள்ள நிலையில் நேற்று மாலை இடம்பெற்ற பிரெக்சிற் தொடர்பான வாக்கெடுப்புடன் இவர்கள் அனைவரினதும் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது .

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இம்மாதம் 31 ஆம் திகதி பிரித்தானியா வெளியேறுகிறது.

இந்நிலையில், பிரெக்சிற் தினத்தைக் குறிக்கும் வகையில் பிரித்தானியா,  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் தருணத்தைக் குறிக்கும் முகமாக பிக் பென் கடிகாரம் இயக்கப்படவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாக,  பிரதமர் போரிஸ் ஜோன்சன் மக்களுக்கு சிறப்பு உரையை ஆற்றுவார்.

மேலும் இந்த நிகழ்வைக் குறிக்க ஒரு சிறப்பு 50 பௌண்ட்ஸ் நாணயமும் வெளியிடப்படவுள்ளது.

நாடாளுமன்றச் சதுர்க்கத்தில் உள்ள அனைத்து கொடிக் கம்பங்களிலும் பிரித்தானியக் கொடி பறக்கவிடப்படும் என அரசாங்கம் கூறியுள்ளது.