Breaking News

ஐரோப்பிய ஒன்றிய விசேட குழு கொழும்பு வருகிறது

 

பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தின் இரண்டு பிரதிநிதிகளும் தேர்தல் / சட்ட மற்றும் பாதுகாப்பு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மூன்று சுயாதீன வல்லுநர்கள் கொண்ட குழுவும் ஆய்வு பணி ஒன்றுக்காக ஆகஸ்ட் 5 முதல் 13 வரை இலங்கையில் தங்கியிருக்குமென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணி பயனுள்ளதாகவும் சாத்தியமானதாகவும் இருக்குமா என்பதை மதிப்பிடுவதற்காகவும் உண்மை தகவல்களை சேகரிப்பதுவுமே இந்த ஆய்வுத் திட்டத்தின் நோக்கமென தெரிவிக்கப்படுகிறது.