உலகம்

ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் தலைவராக தெரிவான முதல் பெண்மணி

 

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஜெர்மனியின் உர்சுலா வான் டெர் லேயன் ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த ஆணையகத்தின் முன்னாள் தலைவர் ஜீன்-கிளாட் ஜுங்கரை நவம்பர் 1 ம் திகதி, ஜேர்மனியின் மத்திய வலதுசாரி பாதுகாப்பு அமைச்சரான லேயன் பதிலீடு செய்யவுள்ளார்.

செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற வாக்கெடுப்பில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் ஆதரவை அவர் பெற்றார்.

ஐரோப்பிய ஆணையகம், ஒன்றியத்தின் சட்டங்களை உருவாக்குகிறது.

ஐரோப்பிய ஒன்றிய விதிகளை அமல்படுத்துகிறது.

தேவைப்பட்டால் உறுப்பு நாடுகளுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம் இதற்கு உள்ளது.

ஐரோப்பிய ஆணையகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் வான் டெர் லேயன் என்பது குறிப்பிடத்தக்கது.