உலகம்

ஐரோப்பாவில் கடும் வெப்பம்

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் வரலாற்றில் அதியுச்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது.

பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் எதிர்வரும் நாட்களில் 40 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேர்மனி, போலாந்து போன்ற நாடுகளிலும் கடுமையான வெப்பநிலை நிலவுகிறது.

ஆபிரிக்க நாடுகளில் நிலவும் கடும் வெப்பத்துடனான காற்று பரப்பலின் காரணமாகவே ஐரோப்பிய நாடுகளின் வெப்பநிலை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக உயிராபத்து ஏற்படலாம் என்றும் அந்த நாட்டின் அரசாங்கம் எச்சரித்துள்ளது.