“ஐயாயிரம் ரூபா முற்பணத்தை வழங்குமாறு கட்டளையிடுகிறேன்” – நாவலப்பிட்டியில் தொண்டமான் அதிரடி !
“ 50 ரூபாவை தொழிலாளருக்கு வழங்க முடியாதவர்கள் 1500 ரூபாவை வழங்க உறுதி கூறுகின்றனர்.தொழிலாளருக்கு தீபாவளி முற்பணமாக ஐயாயிரம் ரூபாவை வழங்க எடுக்கப்பட்ட முயற்சியை நாங்கள் தடுத்ததாக கூறுகிறார்கள். நாங்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் இதுபற்றி கேட்டோம்.அவர்கள் ஒன்றும் கூறவில்லை. நாங்கள் யாரும் அவர்களிடம் முறையிடவில்லை.எனவே தேர்தல் ஆணைக்குழு இதற்கு எந்த தடையும் போடவில்லை. எனவே தொழிலாளருக்கு தீபாவளி முற்பணத்தை உடனடியாக வழங்குமாறு நான் கட்டளையிடுகிறேன்.ஐயாயிரம் ரூபா கொடுக்கலாமென தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார்.எனவே மொத்தமாக 15 ஆயிரத்தை கொடுக்குமாறு நான் கட்டளையிடுகிறேன்.எனது கட்டளையை மீறினால் எதிர்காலத்தில் சரியான அடி கிடைக்கும்.வீடமைப்பு அமைச்சில் வேலைவாய்ப்பு கொடுத்தார்கள் ஒரு தமிழன் இல்லை.காலிமுகத்திடலில் நடந்த ஐக்கிய தேசிய முன்னணி கூட்டத்தில் தமிழ் முஸ்லிம் ஒருவருக்கு கூட பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர்களா எதிர்காலத்தில் தமிழர்களை கவனிக்கப் போகிறார்கள்?”
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் எம் பி நாவலப்பிட்டி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேச்சு !