விளையாட்டு

ஐயாயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் உலக சாதனை


உகண்டாவின் நெடுந்தூர ஓட்டவீரர் ஜோசுவா செப்டகெய் (Joshua Cheptegei) 5,000 மீற்றர் ஓட்டப்போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

மொனாக்கோவில் நடைபெற்ற ஓட்டப்போட்டியில் அவர், இந்த உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இதற்கு முன்னர் 5,000 மீற்றர் ஓட்டப்போட்டியில் ரஷ்யாவின் ரோனெக்ஸ் கிப்ருடோ உலக சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

எவ்வாறாயினும் 12 நிமிடங்கள் 51 செக்கன்களில் ஜோசுவா, 5,000 மீற்றர் தூரத்தைக் கடந்து புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

ஆடவருக்கான 10,000 மீற்றர் ஓட்டப்போட்டியிலும் ஜோசுவா உலக சம்பியனாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.