உலகம்

‘ஐபோன் 11’ என்னென்ன விசேடங்கள்?

 

முன்னணி கைத்தொலைபேசி உற்பத்தி நிறுவனமான அப்பிள், ஐபோன் வரிசையில், தமது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மெக்ஸ்   (iPhone 11 Pro, iPhone 11 Pro Max and iPhone 1)  ஆகிய மொடல்களை, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும், அப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை கலிபோர்னியாவில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகப்படுத்துவது வழமையாகும்.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஐபோன் 11 இல், இரண்டு கமராக்கள் காணப்படுகின்றன. மேலும் அதன் செயற்திறன் அதிகரிக்கப்பட்டு குறைவான ஆற்றலை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது சந்தையில் காணப்படும், ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளில், அதிவேக செயற்பாட்டு மற்றும் கிராபிக்ஸ் தன்மையை கொண்டதாக ஐபோன் 11 வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 11இல், இரண்டு கமராக்களும், ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மெக்ஸில் மூன்று கமராக்களும் காணப்படுகின்றன.

ஐபோன் 11இல், இரவு நேரங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை மிகவும் துல்லியமாக எடுக்க உதவும் ஸ்மார்ட் எச்டிஆர் (HDR) தொழில்நுட்பம் ஐபோன் 11இல் காணப்படுகின்றது.

இதேவேளை, அப்பிள் புதிய ஐபேட் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம், 6ஆம் தலைமுறை ஐபேட்டை வெளியிடப்பட்டிருந்த நிலையில்இ தற்போது 10.2 இன்ச் திரை கொண்ட 7ஆம் தலைமுறை (iPad OS) ஐபேட்டை அப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதுமாத்திரமின்றி, அப்பிள் சீரிஸ் 5  (Apple Series 5) என்ற கைகளில் அணியக்கூடிய நவீன கடிகாரத்தையும் அப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.