விளையாட்டு

ஐபிஎல் சீசனை வெற்றியுடன் தொடங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா

.

 

ஐபிஎல் 2019 சீசனின் இரண்டாவது போட்டி இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஹைதராபாத் சன் ரைஸர்ஸ் இடையே நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய ஹைதராபாத் சன் ரைஸர்ஸ் அணியின் வோர்னர், விஜய்சங்கர் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வோர்னர் 85 ரன்களும், விஜய்சங்கர் 40 ரன்களும் எடுத்தனர். 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி வீரர்கள் கிறிஸ் லின் மற்றும் ராணா ஆகியோர் களமிறங்கினர்

இதில், கிறிஸ் லின் விரைவாக வெளியேறினார் .ஆனால் ராணா நிலைத்து நின்றார். ஹைதராபாத் பந்துவீச்சை எளிதில் சமாளித்த 68 ரன்கள் குவித்த ராணாவுக்கு பக்க பலமாக ரொபின் உத்தப்பா விளையாடினார். இந்தக் கூட்டணி 80 ரன்கள் பாட்னர்ஷிப் சேர்த்த நிலையில் இருவரும் அடுத்தது வெளியேறினர். இருப்பினும் கடைசி கட்டத்தில் கூட்டணி சேர்ந்த இளம்வீரர் சுப்மன் கில் – ரஸ்ஸல் ஜோடி அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடினர் .
இந்தக் கூட்டணி 25 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ரஸ்ஸல் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 49 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலையில் சுப்மன் கில் இரண்டு சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார்.