இலங்கை

ஐந்து இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது

களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய களுத்துறை, பயாகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மெட்டியமுல்லை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் சகிதம் சந்தேக நபர்கள் ஐவரை நேற்று (2) மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்து சுமார் 100 கிரேம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஆறு கையடக்க தொலைபேசிகளும் மற்றும் போதைப் பொருளை அளவிடும் சிறிய ரக இலத்திரனியல் தராசு ஒன்றையும் கைப்பற்றியதுடன் பயாகலை, தொடங்கொடை மற்றும் மெட்டியமுல்லை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர்கள் ஐவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரையும் இன்று (3) களுத்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காக பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.