ஐதேக செயற்குழு நாளை – புதிய கூட்டணி குறித்து தீர்க்கமான முடிவுகள் !
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நாளை கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடவுள்ளது.
அதற்கு முன்னதாக இன்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை சந்தித்து முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு நடத்துகிறார் ரணில்.
புதிய அரசியல் கூட்டணி அமையவுள்ள நிலையில் அதன் செயலாளர் நாயகமாக ரஞ்சித் மத்துமபண்டாரவை நியமிக்கவுள்ளதாக ஏற்கனவே சஜித் அறிவித்துள்ள நிலையில் ,அந்த நியமனத்திற்கு ரணில் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.அதேசமயம் அந்தப் பதவிக்கு ரவி கருணாநாயக்க அல்லது நவீன் திஸாநாயக்கவை நியமிக்க ரணில் தரப்பு கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில் நாளை கூடும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் அமளி ஏற்படலாமென தெரிகிறது. சஜித் தரப்பு விட்டுக்கொடுப்பை செய்யாத பட்சத்தில் நாளைய செயற்குழுவில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாமென ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் குறிப்பிட்டன .