இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று

தேசியப் பட்டியல் உறுப்பினர் தொடர்பில் இன்று (13) இறுதி தீர்மானம் எட்டப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் இது குறித்து கலந்துரையாடி, இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

இதனடிப்படையில், இன்று அல்லது நாளை (14) தேசியப் பட்டியில் உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இம் முறை பொதுத் தேர்தலின் முடிவுகளுக்கு அமைய, ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.