Breaking News

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலகினார் ரோஹித்த போகொல்லாகம

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இராஜினாமா செய்துள்ளார்.

தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுத் தேர்தல் தேசியப் பட்டியல் மற்றும் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலகியதாக முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ​தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலளார் அகில விராஜ் காரியவசத்திற்கு அனுப்பிவைத்ததாகவும் அவர் கூறினார்.