Breaking News

ஏ 9 வீதி விபத்தில் ஒருவர் பலி – நால்வர் படுகாயம்

 

கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். நால்வர் படுகாயமடைந்தனர்.

குறித்த விபத்தில் வானில் பயணித்த ஐவர் காயமடைந்த அதேவேளை அதில் மூவர் மோசமான காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியை சேர்ந்த கதிர்பிள்ளை இரத்தினம் என்பவரே வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 156ம் கட்டை பகுதியின் ஏ9 வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழிலிருந்து பயணித்த வான் மீது எதிர்திசையில் கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்தவர்களில் 30 வயது குடும்ப பெண்ணுடன் அவரது ஒன்றரை வயது குழந்தையும் அடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிப்பர் வாகனத்தின் பிரேக் செயலிழந்தமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.