உலகம்

ஏவுகணை பரிசோதனைகளில் ஈடுபட்டது வடகொரியா !

வடகொரியா , ஹம்கியோங்கில் உள்ள சொந்தோக் என்ற நகரில் இருந்து நேற்று காலை 6.45 மற்றும் 7.02 மணியளவில் ஜப்பானின் கிழக்கு கடல் பகுதியில் குறுகிய தொலைவு சென்று இலக்கை அழிக்கும் இரண்டு ஏவுகணைகளை அனுப்பி பரிசோதனை செய்துள்ளது.

அவை இரண்டும் மேக் 6.5 என்ற வேகத்தில் 380 கி.மீட்டர் தொலைவுக்கு, 97 கி.மீட்டர் உயரத்தில் பறந்து சென்றன

இது, கடந்த ஜூலை 25ந்தேதியில் இருந்து வடகொரியா மேற்கொள்ளும் 7வது ஏவுகணை பரிசோதனை ஆகும். இதற்கு முன், ஜூலை 25, ஜூலை 31, ஒகஸ்ட் 2, ஒகஸ்ட் 6, ஒகஸ்ட் 10 மற்றும் ஒகஸ்ட் 16 ஆகிய நாட்களில் வடகொரியா ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தது.

இதனிடையே, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் கண்காணிப்பில், ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை செலுத்தும் மிக பெரிய ‘சூப்பர் லார்ஜ் மல்டிபிள் ராக்கெட் லோஞ்சர்’ பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

இதுபற்றி கொரிய மத்திய செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “இந்த புதிய மேம்பட்ட சாதனம் ஒரு மிக பெரிய ஆயுதமாக திகழும் என கிம் கூறினார்.

எதிரி நாட்டு படைகளால் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற ராணுவ அச்சுறுத்தல்கள் மற்றும் ஆதிக்க அழுத்தங்களை தயக்கமின்றி தடுக்கின்ற வகையில், ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடர வேண்டிய தேவை நம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது”
என்றும் தெரிவித்து உள்ளது.