Breaking News

ஏப்ரல் 20 வரை அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை – கல்வியமைச்சர் டளஸ் அறிவிப்பு !

 

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக முற்பாதுகாப்பு காரணங்களுக்காக  நாளை முதல் ஏப்ரல் 20 ஆம் திகதிவரை அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்தார்.

சற்றுமுன் நடந்த செய்தியாளர் மாநாட்டில் பேசிய அவர் ,வைரஸ் தாக்கம் நாட்டில் இல்லாதபோதும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பாடசாலை விடுமுறையை முற்கூட்டி வழங்குவதாக தெரிவித்தார்.

மதத் தலைவர்கள் புத்திஜீவிகள் அரசியல் பிரமுகர்கள் பலர் ஏற்கனவே மாணவர் பாதுகாப்பு குறித்து கரிசனையை வெளியிட்டிருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை அனைத்து தனியார் மற்றும் சர்வதேச கத்தோலிக்க பாடசாலைகள் நாளை முதல் இம்மாதம் 26 ஆம் திகதிவரை மூடப்படுமென கொழும்பிலுள்ள கத்தோலிக்க கல்விப்பிரிவு அறிவித்துள்ளது.