உலகம்

ஏதோ ஒரு நாடே எண்ணெய்க் கப்பல்களை தாக்கியது – ஐக்கிய அரபு ராச்சியம்

தமது எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில், ‘நாடு ஒன்றின் அரசாங்கம்’ செயற்பட்டிருப்பதாக ஐக்கிய அரபு ராச்சியம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் ஐக்கிய அரபு ராச்சியம் முன்வைத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 12ம் திகதி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 4 கப்பல்களில் துவாரங்கள் ஏற்பட்டிருந்தன.
இது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெரிவிக்கப்படுகிற போதும், எந்த நாடு என்ற விபரங்களை ஐக்கிய அரபு ராச்சியம் வெளியிடவில்லை.
இந்த தாக்குதலை ஈரானே நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சுமத்துகின்ற போது, தெஹ்ரான் அரசாங்கம் அதனை மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.