உலகம்

எவரெஸ்ட்டில் மற்றுமொருவர் உயிரிழப்பு

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய பிரித்தானியர் ஒருவர் இன்று சனிக்கிழமை உயிரிழந்தார்.
இதன்படி இந்த பருவகாலத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் போது உயிரிழந்த மலையேறிகளின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
ரொபின் ஹைனஸ் பிஷர் என்ற 44 வயதான பிரித்தானியர், சிகரத்தில் இருந்து கீழே இறக்கும் போது சுகவீனமுற்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றையதினம் அயர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையான மலையேறிகள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு அனுமதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.