உலகம்

எவரெஸ்ட்டில் ட்ராஃபிக் ஜாம்

உலகில் உயரமான சிகரமான எவரெஸ்ட்டை அடைவதற்கு நேற்று புதன்கிழமை ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட மலையேறிகள் முயற்சித்துள்ளனர்.
இதனால் அங்கு நெரிசலான நிலைமை அவதானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குறித்த மலையேறிகள், இமயமலையின் நான்காவது முகாம் பகுதியை அடைந்து, அங்கிருந்து சிகரத்துக்கு செல்லும் வழிக்கான அனுமதிக்காக நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டுள்ளது.
இதேவேளை அதிக அளவான மலையேறிகள் பிரவேசிப்பதால், இமயமலைத்தொடரில் சூழல்மாசடையும் நிலை குறித்தும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.