இலங்கை

எல்லை நிர்ணய அறிக்கையை ஜனாதிபதியிடம் வழங்குமாறு பிரதமரை அவசரமாகக் கேட்டது தேர்தல் ஆணைக்குழு !

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அவசர வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் கடிதம் ஒன்றை பிரதமருக்கு அனுப்பியுள்ள தேர்தல் ஆணைக்குழு ,எல்லை நிர்ணய அறிக்கை ஜனாதிபதிக்கு கிடைத்து அவர் அதனை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிட்டால் மாகாண சபைத் தேர்தல் நடத்த இருக்கும் தடை நீங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் நாட்டின் ஜனநாயகமும் பாதுகாக்கப்படுவதுடன் மக்களின் உரிமைகளும் உறுதிப்படுத்தப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது .