உலகம்

எலிசபெத் மகாராணி தலைமையில் அவசர சந்திப்பு

 

பிரித்தானிய அரச குடும்பத்தின் முன்னணி கடமைகளிலிருந்து விலகிக் கொள்வதாக இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் அறிவித்த நிலையில் இது தொடர்பாக எலிசபெத் மகாராணி தலைமையில் அவசர சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

எலிசபெத் ராணியின் உத்தியோகபூர்வ வதிவிடத்தில் இடம்பெற்ற இந்த அமர்வில் பிரித்தானிய அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களான, இளவரசர் சார்ள்ஸ் இளவரசர் வில்லியம், இளவரசர் ஹரி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

ஹரியின் மனைவி மேகன் மேர்கல் கனடாவில் இருந்து தொலைபேசி ஊடாக இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளார்.

பிரித்தானிய அரசகு டும்பத்தின் முன்னணி கடமைகளிலிருந்து விலகிக் கொள்வதாக இளவரசர் ஹரி தம்பதி அறிவித்தமை பக்கிங்காம் அரண்மனையில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.