உஷ்... இது இரகசியம் !

உஷ்… இது இரகசியம் – எம் பியின் புதிய ஹெயார் ஸ்டைல் !

 

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த எம் பி ஒருவர் அவர்.
சற்று வித்தியாசமா முடிவெட்டுடன் பாராளுமன்றம் வந்தார்..

“ எம் பி… எங்கே முடி வெட்டினீர்கள்… என்னாச்சு?” என்று கேட்டனராம் சக எம் பிக்கள்..

“ஒன்றுமில்லை… வீட்டில் மனைவி கையால் சின்ன தப்பு நடந்துவிட்டது..” என்றாராம் அந்த எம் பி..

எம்பிக்கள் ஆளுக்காள் பார்த்துக் கொண்டனர். ‘மனைவி கையால் தப்பா?அதெப்படி ?” என்று கேட்டனர் எம் பிக்கள்.

“ ஆமாம்… எனது தலைமயிரை கடந்த 20 வருடமாக எனது மனைவியே திருத்தி வருகிறார்.. இம்முறை கொஞ்சம் கூடுதலாக கட் ஆகிவிட்டது…” என்று அங்கிருந்தவர்களிடம் கூறிவிட்டு கூலாக சென்றாராம் அந்த எம் பி..