Breaking News

எம் பிக்களுக்கு 2 லட்ச ரூபா வழங்கும் யோசனை நிராகரிப்பு – மைத்ரி தெரிவிப்பு !

“ எம் பிக்களுக்கு மாதம் 4 லட்ச ரூபாவுக்கு மேல் கிடைக்கிறது. இதற்கும் மேலதிகமாக 2 லட்ச ரூபா வழங்கும் யோசனையை அமைச்சரவையில் நிராகரித்தேன்..”

சிறந்த அரசியல் கலாசாரமொன்றிற்காக முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகள் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கையளிக்கும் தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (06) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.அங்கு அவர் மேலும் கூறியதாவது ,

பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் கிடைக்கும் சலுகைகள் மற்றும் உரிமைகள் வரம்பற்றவை.

இன்று காலை அமைச்சரவை கூட்டத்தில் , பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூடுதல் கொடுப்பனவு வழங்குவதற்கான திட்டத்தை அரசாங்கம் முன்வைத்தது.

இப்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு கூடுதலாக இரண்டு லட்ச ரூபா வழங்க முன்மொழியப்பட்டது. எனக்கு ஒரு பெரிய அழுத்தமும் வழங்கப்பட்டது.

தற்போது மாதம் ரூ .4 லட்சத்துக்கு மேல் பெறும் நாடாளுமன்ற எம் பிக்களுக்கு மேலதிகமாக இப்படி வழங்கும் யோசனைக்கு என்னால் கையெழுத்திட முடியாது என்று சொன்னேன்.- இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார்.