விளையாட்டு

எமிலியானோ சாலாவின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது.

 

ஆர்ஜண்டீன உதைபந்தாட்ட வீரர் எமிலியானோ சாலாவின் மரணம் தொடர்பில் 64 வயதான ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் கடந்த ஜனவரி மாதம் விமான விபத்துக்குள்ளாகி அவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக இங்கிலாந்தில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த 64 வயதான ஒருவர் யோர்க்‌ஷெயார் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்