உலகம்

எபோலா வைரஸால் தொடரும் உயிரிழப்புக்கள் !

 

கொங்கோவில் எபோலா வைரஸின் தாக்கம் இன்னும் குறையவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது

கடந்த ஆண்டு மே மாதம் எபோலா வைரஸ் தாக்குதல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 44 பேரில் 23 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர், எபோலா நோய் பரவலைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனத்தால் மருந்துகள் கொங்கோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மிருகங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் இந்த கொடிய வைரஸ் நோயால் கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்தாண்டு மார்ச் மாதம் வரை பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 650 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சு உறுதி செய்துள்ளது. இது மனிதர்களுக்கிடையே பரவும் தொற்று நோயாக மாறிவருதால் கொங்கோ நாட்டு மக்கள் பீதியில் உள்ளனர்.