இலங்கை

” எனது உயிருக்கும் ஆபத்து ” – பேராயர் மல்கம் அதிர்ச்சித் தகவல் !

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ள பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தனது உயிரை எப்போது வேண்டுமானாலும் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விசேட ஆராதனை நிகழ்வு இன்று கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் தேவாலயத்தில் நடைபெற்றது.அங்கு ஆராதனையின் பின்னர் அவர் மேலும் கூறியதாவது ,

தாக்குதல் சம்பவங்களுக்கு பொறுப்பேற்று உரிய அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் பதவி விலக வேண்டும்.இந்த சம்பவங்களில் தொடர்புபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஒன்றும் தெரியாதது போல இருந்தாலும் அவர்கள் கடவுளிடத்தில் ஒரு நாள் பதில் சொல்லியாக வேண்டும்.தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது. என்னையும் பின்தொடர்வதாக சொல்கிறார்கள்.அவர்கள் தொடரட்டும்.எனது உயிர் கடவுளுக்குரியது.அதை எப்போதும் தியாகம் செய்ய நான் தயார் – என்றும் குறிப்பிட்டார் பேராயர்