இலங்கை

எந்தத் தேர்தலையும் சந்திக்கத் தயார் – மலையக கட்சிகள் எம்முடன் இருக்க வேண்டும் – நுவரெலியாவில் மஹிந்த

” ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தலையும் சந்திக்க தயாராக உள்ளது.அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மலையக அரசியல் கட்சிகள் எங்களுடன் இருக்குமென நான் நம்புகிறேன்.அவர்களின் கோரிக்கைகளை நி றைவேற்ற நான் உறுதியளிக்கிறேன் . ராதாகிருஷ்ணன் எம்.பி பிழையான ஒரு இடத்தில் இருக்கிறார் . அவர் எங்களுடன் இருந்திருந்தால் அவருக்கு உரிய இடத்தை நாங்கள் வழங்கியிருப்போம்.”

இப்படி தெரிவித்திருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ . அவரது பாரியார் சகிதம் நுவரெலிய ஹாவா- எலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட வழிபாட்டில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்

ஹாவா – எலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழாவை முன்னிட்டு
ஆலயத்தின் பரிபாலன சபை தலைவரும் விசேட வேலைத்திட்டங்களுக்குமான அமைச்சர் வீ ராதாகிருஷ்ணனின் அழைப்பிற்கினங்க முன்னாள் ஜனாதிபதியுடன் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக உட்பட பலர் வருகை தந்தனர்.

‘ மலையக மக்களுக்கு இந்த அரசு என்ன செய்தது? ஜனாதிபதி தேர்தலில் மலையக கட்சிகள் எங்களுடன் இணைந்திருக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் போது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம்.ராதாகிருஷ்ணன் நல்ல திறமையானவர்.ஆனால் அவர் இருக்கும் இடம் தவறானது.அவருக்கு உரிய இடத்தை அரசு வழங்கவில்லை.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உரியவர்களுக்கு உரிய இடத்தை வழங்குவோம் ” எனவும் மஹிந்த தெரிவித்தார்

( நோட்டன்பிரிட்ஜ் நிருபர் )