இலங்கை

எதிர்வரும் 10 ஆம் திகதி இலங்கை தொடர்பான அறிக்கை ஐ.நாவில் சமர்ப்பிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில், இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 10 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் 44ஆவது கூட்டத்தொடர் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கை, எதிர்வரும் 10 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு கடந்த வருடம் வருகை தந்திருந்த சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணரின் அறிக்கையே இவ்வாறு சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பான விவாதமும் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.