Breaking News

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறக்க தீர்மானம்

எதிர்வரும் திங்கட்கிழமை (17) தொடக்கம் அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் அனைத்து பீடங்களினதும் கற்பித்தல் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தினார்.

கடந்த மாதம் 15 ஆம் திகதி மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவர்களின் பரீட்சையுடன் ஆரம்பித்து, கட்டம் கட்டமாக கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக இணையத்தளத்தினூடாக கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சுகாதாரத் துறையினரின் வழிகாட்டல்களுக்கு அமைய, பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க நம்பிக்கை ​வௌியிட்டார்.