Breaking News

எச்சரிக்கை கடிதம் வெளியானமை குறித்து சி.ஐ.டி விசாரணை !

 

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அறிவுறுத்தல் கடிதம் ஒன்று ஊடகங்களுக்கு கிடைத்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் அதிகாரசபையின் பெண் ஊழியர் ஒருவரிடம் கொள்ளுப்பிட்டி பொலிஸார் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர். அந்தக் கடிதத்தை பிரதி செய்தமை குறித்து அவரிடம் விசாரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

எதிர்வரும் 13 ஆம் திகதி கொழும்பின் பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடக்கலாமென சொல்லும் அந்தக் கடிதம் குறித்து சரத் பொன்சேகா எம் பியும் நேற்று பாராளுமன்றத்தில் சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது