Breaking News

“எங்களையும் நிம்மதியாக இருக்கவிடமாட்டார்களோ?” – நல்லை ஆதீனம் நித்திக்கு பதிலடி !

இலங்கையில் உள்ள நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனமே தனது அடுத்த இலக்கென சுவாமி நித்தியானந்தா கூறியுள்ள நிலையில் , நல்லை ஆதீனம் அது தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் நல்லை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் “ தமிழன்” செய்திச் சேவையிடம் கூறியதாவது,

அவர் உண்மையில் அப்படி சொன்னாரா என்பதை பார்க்கவேண்டும். அல்லது குழப்பங்களை ஏற்படுத்த இடையில் யாரும் ஏதாவது வேலைகளை செய்கிறார்களா என்பதை பார்க்கவேண்டும். எங்களுக்கும் அவருக்கும் எந்த தொடர்புகளும் இல்லை.எங்களை நிம்மதியாக வேலைசெய்ய விடமாட்டார்கள் போல் தெரிகிறது.பொறுத்துப் பார்ப்போம் ..”

என்று குறிப்பிட்டார் நல்லை ஆதீனம் .