உலகம்

எகிப்தில் புராதன உடலப் பேழைகள் கண்டுபிடிப்புஎகிப்தின் லுக்சோர் நகரில் 20ற்கும் மேற்பட்ட மூடப்பட்ட நிலையில் உள்ள புராதன உடலப் பேழைகளை புதைபொருள் ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தற்போதும் தெளிவான வர்ணப்பூச்சுடன் இந்த புராதன மம்மி பேழைகள் காணப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைய வருடங்களில் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபொருட்களில் இந்த உடல் பேழைகள்தான் மிக முக்கியமானவையென எகிப்பதிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

லுக்சோரில் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த புராதன உடலப்பேழைகள் குறித்த மேலதிக விபரங்கள் எதிர்வரும் சனிக்கிழமை நடத்தப்படும் ஊடக மாநாட்டில் பகிரங்கப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.