Breaking News

ஊரடங்கு சட்ட அமுலாக்கம் பற்றிய விசேட அறிவித்தல் !

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்:

தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுதல் என்பன பின்வரும் முறைப்படி நடைபெறும்.

1. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும்.

2. புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மார்ச் 27ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, காலை 6:00 மணிக்கு நீக்கப்பட்டு, மீண்டும், அதே தினம் மதியம் 12:00 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

3. ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் – நாளை, 26ஆம் திகதி, வியாழக்கிழமை, காலை 6:00 மணிக்கு நீக்கப்பட்டு, மீண்டும், நாளையே, மதியம் 12:00 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

ஒரு மாவட்டத்தை விட்டு அடுத்த மாவட்டத்திற்கு எவரும் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை எங்கும் அழைத்துச் செல்லுதலும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நேரங்களிலும் – விவசாயிகள், சிறு தேயிலை தோட்ட மற்றும் ஏற்றுமதி உப உணவுப் பயிர் விவசாயிகள், தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊடக சேவைகளுக்கும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.